பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணி – 5 ஆண்டுகளில் 339 பேர் உயிரிழப்பு..!

இந்தியா

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணி – 5 ஆண்டுகளில் 339 பேர் உயிரிழப்பு..!

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணி – 5 ஆண்டுகளில் 339 பேர் உயிரிழப்பு..!

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியில் 339 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய சமூகநீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது: நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியில் 339 துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். ஆண்டு வாரியாக கூறினால், 2022-ல் 66 பேர், 2021-ல் 58 பேர், 2020-ல் 22 பேர், 2019-ல் 117 பேர், 2018-ல் 67 பேர் என உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை ஆட்கள் மூலம் சுத்தம் செய்ய தடை விதித்தும் இப்பணியில் ஈடுபட்டு வந்தவர்களின் மறுவாழ்வுக்காகவும் 2013-ல் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது இந்தப் பணிகளில் ஆட்களை ஈடுபடுத்துவது குறித்து எந்த தகவலும் இல்லை.

மனிதக் கழிவுகளை கைகளால் சுத்தம் செய்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும், அகற்றுவதற்கும் அல்லது வேறுவிதமாக கையாளுவதற்கும் எந்தவொரு நபரையும் பயன்படுத்துவதை இந்த சட்டம் தடை செய்கிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Leave your comments here...