அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு – மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!
அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ மற்றும் விசாரணை அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகளாக மாற்றியமைத்து மத்திய அரசு கடந்தாண்டு அவசர சட்டம் இயற்றியது.
இதனால் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக்காலத்தை 2023ம் ஆண்டு நவம்பர் 18 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், அமலாக்கத்துறையின் இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் இந்த மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு, பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தெரிகிறது.
முன்னதற்காக அமலாக்கத்துறை இயக்குநரின் பணி நீட்டிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு 3-வது முறை பணி நீட்டிப்பு வழங்கியது சட்டவிரோதமானது என கூறி பணி நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்ததோடு, இந்த மாதம் இறுதிவரை பணியில் தொடர்வார் என்றும், 15 நாட்களில் அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குநரை பணி நியமனம் செய்யவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...