திமுக பைல்ஸ் -2 ..இரும்புப்பெட்டியில் திமுகவினரின் சொத்துப்பட்டியலை ஆளுநரிடம் புகார் கொடுத்த அண்ணாமலை
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, இரும்புப்பெட்டியில் வைத்து திமுக அரசுக்கு எதிரான ஊழல் புகார் குறித்த மனுக்களை அளித்துள்ளார். ரூ. 5600 கோடி மதிப்பிலான 3 முறைகேடுகள் குறித்து திமுக ஃபைல்ஸ் 2 பற்றிய வீடியோவையும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளா
திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.அடுத்தகட்டமாக பாகம் இரண்டில் பினாமிகளின் நில விவரங்கள், அவர்களின் பெயரில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தாக குறிப்பிட்டுள்ளார்.அது தொடர்பான விடியோவையும் வெளியிட்டுள்ளார்.
1. 3000 Crore Scam – ETL Infrastructure Services Limited
2. 2000 Crore Scam in Transport Department
3. 600 Crore Scam in TNMSCWe will elaborate more on this during our Padayatra to our friends in Press & Media.
We demand answers from the corrupt DMK… pic.twitter.com/IM7zvGjrOu
— K.Annamalai (@annamalai_k) July 26, 2023
அந்த விடியோவில், திமுக நிர்வாகிகள் முறைகேடு செய்ததாகக் கூறி ரூ.5,000 கோடி மதிப்புள்ள 3 ஊழல்கள் தொடர்பான விளக்கத்தையும் அண்ணாமலை அளித்துள்ளார்.திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து மதிப்புடன், ஆட்சியில் நடந்த மிக முக்கிய முறைகேடு என்று கூறி அது தொடர்பான கோப்புகளையும் இந்த விடியோவில் இணைத்துள்ளார் அண்ணாமலை. இதில் சொத்து மதிப்பு என்று ரூ.1343170000000 என்ற தொகை பதிவு செய்யப்பட்டுள்ளது.எல்காட் என்ற அரசு நிறுவனம், இடிஎல் என்ற துணை நிறுவனத்தைத் தொடங்கியதாகவும், அந்த இடிஎல் உள்கட்டமைப்பு சேவை நிறுவனம் ரூ.3000 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Today, along with the Senior leaders of @BJP4TamilNadu, we had the opportunity to meet our Hon Governor of TN, Thiru RN Ravi avl.
We presented a memorandum seeking his excellency’s intervention & suitable action concerning Part 2 of DMK files with documents on Benami connected… pic.twitter.com/QJv7DHdkk3
— K.Annamalai (@annamalai_k) July 26, 2023
மேலும், போக்குவரத்துத் துறையில் சுமார் 2,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக விடியோவில் அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதாவது, வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் மூலம் எவ்வாறு முறைகேடு நடத்தப்பட்டது என்றும், விண்ணப்பித்த ஒரே நாளில் விநியோகஸ்தர்கள் அங்கீகரிக்கப்பட்டதாகவும் விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று, @BJP4TamilNadu மூத்த தலைவர்களுடன், நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு RN ரவி அவர்களைச் சந்தித்தோம்.
மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய,… pic.twitter.com/14Pj7Jjpvq
— K.Annamalai (@annamalai_k) July 26, 2023
தமிழ்நாடு மெடிகல் சர்வீஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.600 கோடி அளவுக்கு முறைகேடு செய்திருப்பதாகவும் விடியோவில்குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பாஜக சார்பில் நடைபெறும் பாதயாத்திரையின்போது ஊடகத்தினருக்கு விரிவாக விளக்குவேன் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்ட கோப்புகளை வழங்கினார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்ட கோப்புகளை வழங்கினார்.சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. இந்த சொத்து விவரத்தில், ரூ. 5,600 கோடி மதிப்பிலான ஊழல் விவரங்களையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டரில், ‘இன்று, பாஜக மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தோம்.ஆளுநரிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ. 5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்று பதிவிட்டிருந்தார்.இந்த நிலையில், ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ஊழல் விவரம் குறித்த விடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
Leave your comments here...