பதவி உயர்வுகளில் முறைகேடு – 45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியராக பதவியிறக்கம்
- July 23, 2023
- jananesan
- : 369
- #TNGovt
தமிழகத்தில் 45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியராக பதவியிறக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் ஆணையரகம் அறிவித்துள்ளது. 2014 முதல் 2019 வரை பதவி உயர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பட்டியலில் தகுதி இருந்தும் தங்கள் பெயர் சேர்க்கப்படவில்லை என பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுடுத்திருந்தனர்.
அதாவது, 2014 முதல் 2019 வரை பதவி உயர்வு வழங்கப்பட்டதில் சில முரண்பாடுகள் இருப்பதாக சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது முக்கியமான பதவி வகித்து வரக்கூடிய துணை ஆட்சியராக இருந்தவர்கள் வட்டாட்சியராக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 110 பாதிக்கப்பட்டவர்களுக்கு சப் கலெக்டர் பதவி உயர்வு என்பது வழங்கப்பட்டுள்ளது. அதாவது, வட்டாட்சியராக இருந்தவர்கள் துணை ஆட்சியராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ள ஆர்டர் தற்போது வந்துள்ளது. அதே சமயம் பாதிக்கப்பட்டவர்கள் வரக்கூடிய ஆண்டுகளில் அவர்களும் சப் கலெக்டராக மீண்டும் பதவி உயர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வருவாய் நிர்வாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு நிர்வாக காரணங்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...