இந்திய மீனவரின் மீன்பிடி உரிமையை பாதுகாத்திடுக – இலங்கை அதிபரிடம் வலியுறுத்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழகம்

இந்திய மீனவரின் மீன்பிடி உரிமையை பாதுகாத்திடுக – இலங்கை அதிபரிடம் வலியுறுத்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இந்திய மீனவரின் மீன்பிடி உரிமையை பாதுகாத்திடுக – இலங்கை அதிபரிடம் வலியுறுத்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாப்பது பற்றி இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாப்பது பற்றி இலங்கை அதிபரிடம் பேச வேண்டும்.இலங்கை தமிழர்களின் நியாமான கோரிக்கைகளை நிறைவேற்ற இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும்.இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது, படகு பறிமுதல் பற்றி பிரதமர் மோடி பேச வேண்டும்.

2023ம் ஆண்டில் மட்டும் 74 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களில் 59 பேர் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்பியுள்ள நிலையில், 2020ம் ஆண்டு முதல், 67 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது.கடந்த ஜூலை 9ம் தேதி 15 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.இலங்கைக் கடற்படையினரால் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது.

நமது மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது, மாநிலத்தின் கடலோர கிராமங்களில் உள்ள மீனவ மக்களிடையே ஆழ்ந்த கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும்,இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave your comments here...