மணிப்பூர் பழங்குடியின பெண்கள் சர்ச்சை வீடியோ : வீடியோவை நீக்க வேண்டும் – சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..!
மணிப்பூரில் கூகி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வணமாக இழுத்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வீடியோவை நீக்குமாறு சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் சமீபத்தில் தான் கலவரங்கள் ஒய்ந்து, இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் 4ம் தேதி காங்போப்கி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளம் பெண்கள் இருவரை இளைஞர்கள் நிர்வணமாக அழைத்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த இளம் பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுவதால், மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பழங்குடியின சமூகத்தை அவமதிப்பதாக, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல், பிரியங்கா, கார்கே, அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியில் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தும் படி, போலீசாருக்கு அம்மாநில முதல்வர் பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் மணிப்பூரில் கூகி பழங்குடியின 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி தவுபால் மாவட்டத்தைச் சேர்ந்த ஹீராதாஸ் 32 என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் ஆண்களால் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோவை சமூக வலைதளத்திலிருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வீடியோ பரவ காரணமாக இருந்ததால் டுவிட்டர் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Leave your comments here...