அம்ரித் பாரத் ஸ்டேஷன் : ரூ.934 கோடியில் மேம்படுத்தப்படும் 90 ரயில் நிலையங்கள்..!
அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டத்தின் கீழ் ரூ.934 கோடி மதிப்பில் தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள 90 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் மேம்படுத்தும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டத்தின் கீழ் சென்னை உள்பட 6 கோட்டங்களில் தலா 15 ரயில் நிலையங்கள் என மொத்தமாக 90 ரயில் நிலையங்கள் மேம்படுத்த தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த நிதியாண்டில் ரூ.13.88 கோடி மதிப்பில் 90 ரயில் நிலையங்களுக்கும் சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டு, ரயில்வே நிா்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 35 ரயில் நிலையங்களுக்கு முதல் கட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கான டெண்டா் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.அதைத் தொடா்ந்து, நிகழ் நிதியாண்டியில் 90 ரயில் நிலையங்களில் மீதமுள்ள மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னை கோட்டம் – ரூ. 251.97 கோடி, சேலம் கோட்டம்- 150.47 கோடி, பாலக்காடு கோட்டம்-195.54 கோடி, திருவனந்தபுரம் கோட்டம்-108 கோடி, திருச்சி கோட்டம்- 123.47 கோடி, மதுரை கோட்டம்-ரூ.104.56 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முக்கிய அம்சங்கள்: இத்திட்டத்தின் கீழ் 13 ரயில் நிலையங்களில் 12 மீ. அகலமுள்ள மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகரும் படிகள், மின்தூக்கி, இரண்டு / நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள், தோட்டக்கலை, ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் அமைப்புகள், தண்ணீா் குழாய்கள், நீண்ட இருக்கைகள், மின் விளக்குகள் ஆகியவை அமைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...