கிறிஸ்மஸூக்கு ஆப்பு வைத்த புருனோ: கொண்டாடினால் 5 ஆண்டுகள் சிறை !
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 ல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முழுக்க முழுக்க எண்ணெய் வளம் மிக்க நாடான புரூனேவில் மத ரீதியாக பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் ஒன்றாகத்தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை பொது இடத்தில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் பாடல் பாடுவது, கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து வைப்பது, கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வெளியில் வருவது, ஸ்டார்களை வீட்டுக்கு வெளியே தொங்க விடுவது போன்ற செயல்கள் இஸ்லாமுக்கு எதிரானது என்றும் புரூனே அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆயுதக் குழு ஒன்று தலைநகர் மொகாடிஷுவில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தியது. அதில் மூன்று வீரர்கள் மற்றும் ஒரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த விழாவுக்கு பல அரபு நாடுகள் பல ஆண்டுகளாக தடை விதித்துள்ள. சோமாலியா அரசு தங்கள் நாடு முஸ்லிம் நாடு என்றும், அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட கூடாது என்றும் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாட்டின் முஸ்லிம் நம்பிக்கையை அச்சுறுத்தி வருவதாக சோமாலியாவின் மத விவகார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் ஷேக் முகமது கெய்ரோ தெரிவித்துள்ளார்.
மேலும் தடையை மீறி தங்கள் மத கொள்கைகளுக்கு ஒத்து வராத செயல்களில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புருனே அரசு தெரிவித்துள்ளது. அதாவது 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டு தூதர்கள் மற்றும் அரசு ரீதியிலான வெளிநாட்டு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தங்கள் வீடுகளுக்குள் கிறிஸ்துமஸ் கொண்ணடாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மரங்களை வைக்கவோ, பள்ளிகளில் பரிசு பொருட்களை வழங்க வோ கூடாது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது
Leave your comments here...