டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் பணிநீக்கம் – அமைச்சர் முத்துசாமி அதிரடி உத்தரவு..!

தமிழகம்

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் பணிநீக்கம் – அமைச்சர் முத்துசாமி அதிரடி உத்தரவு..!

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் பணிநீக்கம் – அமைச்சர் முத்துசாமி அதிரடி உத்தரவு..!

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 2 நாள்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.அப்போது டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும், கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, ‘தமிழ்நாட்டில் சில டாஸ்மாக் கடைகளில் தவறுகள் நடந்துள்ளன என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இது வழக்கமானதுதான், சில இடங்களில் தவறு நடந்துள்ளதை வைத்து ஒட்டுமொத்தமாக தவறு நடப்பதாக பரப்புகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு புகார் வரும்பட்சத்தில் அபாரதமோ அல்லது அதிக புகார்களோ வந்தால் பணி நீக்கமோ செய்யப்படுகிறது.மது விற்பனை நேரம் குறைப்பு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்னை குறித்தும் கேட்டு வருகிறோம்’ என்றார்.

Leave your comments here...