குஜராத், சத்தீஷ்காரில் ஏழுமலையான் கோவில் திருப்பதி தேவஸ்தானம் முடிவு..!
சத்தீஷ்கார் மாநில தலைநகரான ராய்ப்பூர், குஜராத் மாநிலம் காந்தி நகரில் ஏழுமலையான் கோவில்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என திருப்பதி அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியுள்ளார்
திருப்பதி அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது:- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் நலனுக்காக ரூ.4.15 கோடியில் கூடுதலாக லட்டு கவுண்ட்டர் கட்டப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்படும். திருமலை எஸ்.வி.சி. பகுதியில் 18 பிளாக்குகளில் 144 அறைகளின் புனரமைப்பு பணிகள் ரூ.2.35 கோடியில் மேற்கொள்ளப்படும்.
திருப்பதியில் ராமானுஜர் சந்திப்பு முதல் ரேணிகுண்டா வரை ரூ.5.61 கோடியில் சாலை அமைக்கப்படும். விரைவில் சத்தீஸ்கரின் தலைநகரான காந்தி நகர், குஜராத் மற்றும் ராய்ப்பூரில் ஏழுமலையான் கோவில்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருமலைக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவதை தடுக்க அலிபிரியில் சோதனை சாவடியில் பலப்படுத்தப்படும். இதற்காக மாநில அரசுடன் கலந்தாலோசித்து தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டறிய அதிநவீன தொழில்நுட்ப வாகன ஸ்கேனர்களை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...