18 நாடுகளுக்கு, 18 லட்சம் டன் கோதுமை வழங்கிய இந்தியா – ஐ.நா.,வின் வேளாண் மேம்பாட்டு நிதியம் பாராட்டு..!

இந்தியாஉலகம்

18 நாடுகளுக்கு, 18 லட்சம் டன் கோதுமை வழங்கிய இந்தியா – ஐ.நா.,வின் வேளாண் மேம்பாட்டு நிதியம் பாராட்டு..!

18 நாடுகளுக்கு, 18 லட்சம்  டன் கோதுமை வழங்கிய இந்தியா –  ஐ.நா.,வின் வேளாண் மேம்பாட்டு நிதியம் பாராட்டு..!

ரஷ்யா – உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டு, உணவு பற்றாக்குறை ஏற்பட்ட, 18 நாடுகளுக்கு, 18 லட்சம் கோதுமையை, நம் நாடு ஏற்றுமதி செய்துள்ளதை, வேளாண் வளர்ச்சிக்கான, ஐ.நா.,வின் சர்வதேச நிதிய தலைவர் பாராட்டியுள்ளார்

ஜி-20 வேளாண் அமைச்சர்கள் மாநாட்டையொட்டி, இந்தியா வந்த, ஐ.நா.,வின் வேளாண் மேம்பாட்டு, சர்வதேச நிதியத்தின் தலைவர், அல்வரோ லாரியோ, பி.டி.ஐ., செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியாவின் ஜி-20 தலைமை, உணவு முறைகளை மாற்றியமைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.பயிர்சாகுபடி, அறுவடை செய்வது, பதப்படுத்துதல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வது, சந்தைப்படுத்துவது, உணவு நுகர்வு ஆகியவற்றை அடக்கிய, உணவு அமைப்பு முறையானது, கடந்த சில ஆண்டுகளில், பலவீனமாகியுள்ளது.

கொரோனா தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை, உலக உணவு பாதுகாப்பை கடுமையாக பாதித்துள்ளன; இதனால், ஆப்பிரிக்க நாடுகளில், உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.உலகளவில் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர, உக்ரைன் போர் வழிவகுத்தது ; இதனால், ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

உக்ரைன் போரால், கடந்தாண்டு உணவு பற்றாக்குறையை எதிர்கொண்ட, 18 நாடுகளுக்கு 18 லட்சம் டன் கோதுமையை, இந்தியா ஏற்றுமதி செய்தது பாராட்டுக்குரியதாகும்.தெற்குலக நாடுகளின் ஒத்துழைப்பில், இந்தியா சிந்தனைமிக்க தலைமையை வெளிப்படுத்தி வருகிறது.சிறுதானிய பயிர்கள், வறட்சியை தாங்கி வளரக்கூடியவை.

உலகின் ஏழ்மையான மற்றும் தொலைதுார பகுதிகளில் ஊட்டச்சத்து தேவையை, சிறுதானிய பயிர்கள் பூர்த்தி செய்கின்றன. சிறுதானிய பயிர்களை, புத்துயிரூட்ட இந்தியா எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.ஐ.நா.,வின் சிறப்பு முகமையான, வேளாண் மேம்பாட்டுக்கான, சர்வதே நிதியம், வறுமை, பட்டினி மற்றும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதில், ஏழை நாடுகளுக்கு உதவி வருகிறது.

இதன்படி, சர்வதேச அளவில், உணவு அமைப்புகளை சீரமைக்க, ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர் முதல் 350 பில்லியன் டாலர் வரை தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...