பெரியார் சிலை பொறித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா..!
தமிழ்நாட்டை சேர்ந்த சமூக நீதி பேரவையினர் தந்தை பெரியார் படம் மற்றும் தந்தை பெரியார் உருவம் பொறித்த செங்கோல் ஆகியவற்றை சமூக நீதிக்காக போராடும் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு வழங்கினர். ஆனால் தந்தை பெரியார் படத்தை மட்டும் பெற்றுக் கொண்ட சித்தராமையா, செங்கோல் ஒரு சடங்கு, சம்பிரதாயக் குறியீடு என்பதால் அதனைப் பெற மறுத்துள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து கர்நாடகாவின் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, தமிழகத்தை சேர்ந்த சமூகநீதி பேரவை என்ற அமைப்பினர் சென்றிருந்தனர். அப்போது சித்தராமையா, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறி, பெரியார் முகம் பொறித்த செங்கோலை வழங்கினர்.
இதனை வாங்க மறுத்தார். இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடரபான குறியீடு. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம். ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்.
Leave your comments here...