நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயர் மாற்றம் – காங்கிரஸ் கண்டனம்..!
மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி பெற்ற அமைப்பாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்.
தில்லியில் தீன் மூர்த்தி பவன் என்ற வரலாற்று கட்டடத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் உள்ளது. ஆங்கிலேய ஆட்சியில் அவர்களுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு இதில் தங்கியுள்ளார்.நேரு மறைந்த பிறகு அங்கு ஒரு நூலகமும் விடுதலை போராட்டத்தில், இந்தியாவின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டு நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை ‘பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம்’ என்று மாற்றி அறிவித்தது மத்திய அரசு.இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில் நேரு அருங்காட்சியகத்தின் பெயர் பலகைகள் மாற்றப்பட்டு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
#WATCH | Delhi: Nehru Memorial Museum and Library Society renamed as Prime Ministers’ Museum and Library Society pic.twitter.com/JfFCNX8XBm
— ANI (@ANI) June 17, 2023
இதுதொடர்பாக அவர் கூறுகையில், அற்பத்தனம் மற்றும் பழிவாங்கும் செயல் என்பதன் பெயர் மோடி. கடந்த 59 ஆண்டுகளாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் சர்வதேச அறிவுசார் அடையாளமாக இருந்துள்ளது. இனி அது பிரதம மந்திரி அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும். இந்திய தேசிய அரசின் அரசியல் சிற்பியின் பெயர் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க, மறைக்க மோடி எதையும் செய்வார். பாதுகாப்பின்மை எண்ணம் காரணமாக சிறுமையைச் சுமந்து திரியும் சிறிய மனிதர் என தெரிவித்தார்.
Leave your comments here...