பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை : சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் தீர்ப்பு.!
பெண் எஸ்.பி.,,க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பதவி வகித்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி, அவருக்குஉடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்.பி. ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார், முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்கள் இருவர் மீதும் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணையானது நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம்ஆண்டு ஜூலை மாதம் முதல் தொடங்கி நேற்று வரை கிட்டத்தட்ட 139 முறை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர், முன்னாள் உள்துறைச் செயலாளர், சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் நடுவர் விசாரணை நடத்தியுள்ளதோடு, அந்த சாட்சியங்களிடம் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி முடித்தனர்.
தற்போது சாட்சியங்களிடம் விசாரணை, குறுக்கு விசாரணைகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பு மற்றும் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. ஆகியோர் ஆஜராகினர்.
இதனையடுத்து இவ்வழக்கில் அனைத்து விசாரணையும் நிறைவு பெற்ற நிலையில். இன்று நடுவர் புஷ்பராணி சிறப்பு எஸ்.பி.,க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும். ரூ20,500 அபராதமும், முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி.,க்கு ரூ500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சிறப்பு டிஜிபி-யை இன்றே ஜாமீனில் விடுவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
பெண் எஸ்.பி.,க்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த, அனைத்து தரப்பினராலும் உற்று நோக்கக்கூடிய இவ்வழக்கு பெரும் எதிர்ப்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.
Leave your comments here...