மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி..!

தமிழகம்

மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி..!

மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி..!

மேகதாது அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆய்வு செய்தார். திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் 96 சதவீத தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார். எஞ்சியப் பணிகளும் இன்னும் சில நாட்களுக்குள் முழுமையாக நிறைவு பெறும் என்றும் உறுதி அளித்தார்

நிலக்கரி சுரங்கம் அமைப்போம் என மத்திய அரசு அறிவித்த உடனே, மத்திய அரசிற்கு கடிதம் எழுதினோம். மேலும் நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்கமாட்டோம் என சட்டமன்றத்தில் நானே அறிவித்தேன். எனவே டெல்டாவினுடைய உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக இந்த அரசு செயல்படும். அதே போல காவிரி பகுதியில் உள்ள வேளான் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேகதாது அணை குறித்த கேள்விக்கு, கடந்த கர்நாடகா அரசை போல புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறியுள்ளது. ஆனால் கருணாநிதி அரசை போல மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்க்கும். இதுவே தமிழக அரசின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

Leave your comments here...