நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நெல், உளுந்து, கம்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று(ஜூன் 07) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. நெல், உளுந்து, கம்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதை, நிலக்கடலை, பாசிப்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ப
ருத்தி, கம்பு, உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளது.
* நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூ.3,750-ல் இருந்து ரூ.6.620 ஆக உயர்வு
* சோயா பீன்ஸ்-க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,560ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்வு
* மக்கா சோளம்- குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,310ல் இருந்து ரூ.2,090 ஆக உயர்வு
* கேழ்வரகு- குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,550 ல் இருந்து ரூ.3,846 ஆக உயர்வு
* துவரம் பருப்பு- குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.4,350ல் இருந்து ரூ.7,ஆயிரம் ஆக உயர்வு
* 2014-15,ல் ரூ.4.350ல் இருந்த துவரம் பருப்புக்கான ஆதரவு விலை தற்போது ரூ.7ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...