கோவையில் ராட்சத பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் – ஒப்பந்ததாரர் கைது..!

தமிழகம்

கோவையில் ராட்சத பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் – ஒப்பந்ததாரர் கைது..!

கோவையில் ராட்சத பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் – ஒப்பந்ததாரர் கைது..!

கோவை அருகே விளம்பர பலகை சரிந்து விழுந்த சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விளம்பர பலகை, மற்றும் விளம்பர பேனர் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தலையிட்டு கண்டித்து வந்ததுடன், கடுமையான உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வந்தாலும், ஆளும் கட்சியினர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தியும் அதிகார துஷ்பிரயோகத்தால் விளம்பர பேனர் கலாசாரம் தொடர்கதையாகி வருகிறது.விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம், மாவட்ட நிர்வாகத்துக்கே உள்ளது.

இந்த அனுமதி வாங்கியபின்பே உள்ளாட்சிகளுக்கு உரிய கட்டணம் செலுத்தி அவற்றை நிறுவ வேண்டும்.இந்நிலையில் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அவிநாசி மெயின் ரோட்டில், விளம்பர பலகை கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சரிந்து விழுந்ததது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கருத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தில் தொழிலாளர்களுக்கு எந்தவித பாததுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. விளம்பர பேனர் சரிந்து விழுந்த சம்பவத்தில் விளம்பர ஒப்பந்ததாரர் பழனிசாமி கைது செய்யப்பட்டு உளளார். மேலும் அவர் நாளை (2 ம் தேதி) கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து விளம்பர உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

வாகன ஓட்டிகளின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் ரோட்டில் எந்த விளம்பரமும் இருக்கக்கூடாது என்பதை இந்திய சாலைக் குழும(ஐ.ஆர்.சி.,) விதிகளும் வலியுறுத்துகின்றன. ஆனால், ஒவ்வொரு முறை கோர்ட் உத்தரவிடும்போது, இவை அகற்றப்படுவதும், அதன் பின் சில நாட்கள் கழித்து அவை மீண்டும் வைக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

Leave your comments here...