ரேஷன் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம் – அமைச்சர் பெரியகருப்பன் கொடுத்த விளக்கம்!
ரேஷன் கடைகளில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலம் வரை ரூ.2,000 நோட்டுக்களை பயன்படுத்தலாம். ரேஷன் கடைகளில் மட்டுமல்ல, அனைத்து கடைகளிலும் செப்டம்பர் 30 வரை ரூ.2,000 நோட்டுக்களை பயன்படுத்தலாம் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரேஷன் கடைகளில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலம் வரை ரூ.2,000 நோட்டுக்களை பயன்படுத்தலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறியதாவது:- ரேஷன் கடைகளில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலம் வரை ரூ.2,000 நோட்டுக்களை பயன்படுத்தலாம். ரேஷன் கடைகளில் மட்டுமல்ல, அனைத்து கடைகளிலும் செப்டம்பர் 30 வரை ரூ.2,000 நோட்டுக்களை பயன்படுத்தலாம்.ரூ.2,000 நோட்டு பணபரிவர்த்தனையில் அனைத்து வங்கிகளுக்குமான சட்டங்கள் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். கூட்டுறவு வங்கிகளிலும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
முன்னர் 500, 1000 ரூபாய் செல்லாது என திடீரென அறிவித்ததைப்போல் இல்லாமல் இந்த முறை 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்பதை முன்னதாக தெரிவித்த மத்திய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் நன்றி. இந்த கால அவகாசத்தை உரியவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...