மன் கி பாத் 100-வது நிகழ்ச்சிக்கான கண்காட்சி – நேரில் பார்வையிட்டார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட்டது. காலை 11 மணி முதல் 11.30 மணி வரை மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. 100-வது அத்தியாயம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
அவர் இந்தியில் உரையாற்றியது 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதோடு ஆங்கிலம் உள்ளிட்ட 12 வெளிநாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பானது. 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை முன்னிட்டு டெல்லி தேசிய நவீன கலைக்கூடத்தில் ஜன சக்தி கண்காட்சி ஏப்ரல் 30 ஆம் தேதி பொது மக்கள் பார்வையிட திறந்து வைக்கப்பட்டது. இதனை பிரபல கலைஞர் அஞ்சோலி எலா மேனன் திறந்து வைத்தார்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜன சக்தி கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் நீர் பாதுகாப்பு, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு, தூய்மை இந்தியா, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம், இந்திய வேளாண் முறை, யோகா மற்றும் ஆயுர்வேதம், இந்திய அறிவியல், விளையாட்டு ஆரோக்கியம் உள்பட 12 வெவ்வேறு தலைப்புகளில் மனதின் குரல் தொடர்பான நாயகர்கள் குறித்து கலைஞர்களின் கைவண்ணத்தில் வரையப்பட்ட கலை ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Here are some more glimpses from Jana Shakti exhibition at @ngma_delhi. pic.twitter.com/Cz9WmOuLK0
— Narendra Modi (@narendramodi) May 14, 2023
கண்காட்சியை கண்டுரசித்த பிரதமர் மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜன சக்தி கண்காட்சி பட்டியலில் கையெழுத்திட்டார். கண்காட்சியில் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது அதாகரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
Leave your comments here...