அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருக்குறள் கட்டாயம் – தலைமைச் செயலாளர் உத்தரவு..!

தமிழகம்

அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருக்குறள் கட்டாயம் – தலைமைச் செயலாளர் உத்தரவு..!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருக்குறள் கட்டாயம் – தலைமைச் செயலாளர் உத்தரவு..!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் அலுவலகங்களை தவிர மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத் துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஊாரியங்கள், கழகங்கள் இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லையும் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும். மேலும் ஒரு திருக்குறளை பொருளுடன் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும்.

எனவே மேற்படி அரசாணையில் அறிவுறுத்தியதிற்கிணங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேலும் திருக்குறளின் முப்பாக்களில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய அதிகாரங்களில் அதன் பொருளுடனும் தமிழ் ஆட்சிச் சொல் அகராதியில் உள்ள சொற்களில் ஓர் ஆங்கில சொல்லை அதற்குரிய தமிழ்ச் சொல்நுடனும் 4×3 என்ற அளவில் அனைத்து அலுவலக கரும்பலகை வெள்ளை பலகையிலும் நாள்தோறும் எழுதி வைக்குமாறு அனைத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள் முதன்மை செயலாளர்கள்/ செயலாளர்கள், துறைத் தலைமை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு கழகங்கள், வாரியங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் ஆகியோர்களை கேட்டுக் கொள்ளலாம். மேலும் மேற்படி பணிகள் நடைபெற்று வருவதை கண்காணித்து உரிய அறிக்கைகளை அரசுக்கு அனுப்புமாறு தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் வளர்ச்சி மண்டல துணை இயக்குநர் / மாவட்ட நிலை அலுவலர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...