கட்டணம் செலுத்தாத பிரபலங்களின் பக்கங்களில் புளூடிக்கை நீக்கிய ட்விட்டர் நிறுவனம்..!

இந்தியா

கட்டணம் செலுத்தாத பிரபலங்களின் பக்கங்களில் புளூடிக்கை நீக்கிய ட்விட்டர் நிறுவனம்..!

கட்டணம் செலுத்தாத பிரபலங்களின் பக்கங்களில் புளூடிக்கை நீக்கிய ட்விட்டர் நிறுவனம்..!

உலகம் முழுவதும் கட்டணம் செலுத்தாத பிரபலங்களின் பக்கங்களில் புளூடிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

ட்விட்டரில் அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசுத்துறைகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களுக்கு அங்கீகார குறியீடு வழங்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர், புளூடிக் பெறுவதற்கான கட்டணத்தை அறிவித்தார். ஒவ்வொரு கணக்குக்கும் 8 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, இந்திய மதிப்பில் மாதந்தோறும் 657 ரூபாய் கட்டணம் செலுத்துவோருக்கு புளூ டிக் வழங்கப்படும் எனவும், ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு கட்டணம் செலுத்தாதவர்களின் பக்கங்களில் புளூடிக் நீக்கப்படும் எனவும் ட்விட்டர் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், மாத கட்டணத்தை செலுத்தத் தவறியவர்களின் கணக்குகளில் இருந்து அதிரடியாக புளூடிக் நீக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிம்பு மற்றும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள்,போப் பிரான்சிஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உட்பட உலகம் முழுவதும் பணம் செலுத்தாத ஏராளமான பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்களில் இருந்து புளூடிக் நீக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...