இந்தியாவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் எண் இன்று முதல் கட்டாயம்..!

இந்தியா

இந்தியாவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் எண் இன்று முதல் கட்டாயம்..!

இந்தியாவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் எண் இன்று  முதல் கட்டாயம்..!

தங்க நகைகளில் ஹெச்.யூ.ஐ.டி., எனப்படும் ‘ஹால்மார்க் தனித்துவ அடையாள எண்கள்’ இன்று(ஏப்.,01) முதல் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் இந்த அடையாளத்தைப் பார்த்து நகை வாங்கும்படி, பி.ஐ.எஸ்., அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம், தங்க நகைகள் மற்றும் தங்கத்திலான கலைப் பொருட்களுக்கு ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் முறையை அறிமுகம் செய்துள்ளது.

பி.ஐ.எஸ்., லோகோ, நகையின் துாய்மைத் தன்மை ஹால்மார்க் தனித்துவ 6 இலக்க அடையாள எண் ஆகிய மூன்று குறியீடுகளைக் கொண்ட ஹால்மார்க் முத்திரை அனைத்து தங்க நகைகளுக்கும், ஏப்., 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் நகை வாங்கும்போது இதை கட்டாயமாக பார்த்து வாங்கவும். நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படாத பழைய நகைகள் இருப்பின், அவற்றில் மறுமுத்திரை பதிவு செய்ய வேண்டும். பி.ஐ.எஸ்., பதிவு பெற்ற நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்த தனித்துவ அடையாள எண் இன்றி விற்பனை செய்தால், அவர்களின் பதிவு ரத்து செய்யப்படும். பி.ஐ.எஸ்., பதிவு பெறாத நகை விற்பனையாளர்கள் ஹெச்.யூ.ஐ.டி. எண்ணுடன் ஹால்மார்க் செய்த நகைகளையோ, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளையோ விற்பனை செய்ய அனுமதி இல்லை. மீறினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஹால்மார்க் எண் பெற்ற நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையமான பிஐஎஸ் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 26 மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 288 மாவட்டங்களில் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது. மாநிலத்தில் மொத்தம் 13,341 கடைகளில் ஹால்மார்க், HUID எண் இன்று முதல் கட்டாயம் அமலாக்கப்பட்டது. 2 கிராம் நகை, ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் குறைவாக விற்பனை செய்யும் நகைக்கடைகளுக்கு புதிய நடைமுறை பொருந்தாது எனவும் அறிவித்துள்ளது. ஹால்மார்க் மூலம் நகையின் தரம், விற்பனை தொடர்பான விவரங்களை வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...