தமிழக பட்ஜெட் அரசின் : செப்.15 முதல் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை..!

தமிழகம்

தமிழக பட்ஜெட் அரசின் : செப்.15 முதல் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை..!

தமிழக பட்ஜெட் அரசின் : செப்.15 முதல் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை..!

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:- கோவையில் ரூ.172 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழிப்பூங்கா 2 கட்டங்களாக அமைக்கப்படும். முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். ஒகேனக்கல் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.7,149 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழகத்தில் 10,000 குளங்கள், ஊரணிகளை புதுப்பிக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு. முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழ்நாடு நெய்தல் திட்டம் அமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.

கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும். வளம்மிகு வட்டாரங்கள் திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும். ரூ.1000 செலவில் வடசென்னை வளர்ச்சி திட்டம்.

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் கட்டப்படும். போக்குவரத்து துறைக்கு ரூ.8,059 கோடி நிதி ஒதுக்கீடு. சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.320 கோடி நிதி ஒதுக்கீடு. நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.19,465 கோடி நிதி ஒதுக்கீடு. 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ரூ.20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். 2030ஆம் ஆண்டுக்குள் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழகத்தில் 2 லட்சம் முதலீடுகள் பெறப்பட்டு 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும். பசுமை வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம். இந்தியாவில் உற்பத்தியான மின்சார வாகனங்களில் 46 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை. தகுதி வாய்ந்த குடும்பங்களில் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதி ஆண்டு முதல் 1000 ரூபாய் வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும். இதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave your comments here...