இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6% உயர்வு – மத்திய அரசு தகவல்..!!
- March 17, 2023
- jananesan
- : 328
- Tiger
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6% உயர்ந்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வனங்களின் சூழல் தன்மையை பாதுகாப்பதில் புலிகள் முக்கிய பங்காற்றுகின்றன.
ஆனால், தற்போதைய காலக் கட்டத்தில் புலிகள் இனம் அழிந்து வருகின்றன. புலிகள் தங்கள் இயற்கை வாழ்விடங்களில் 90% இழந்துவிட்டன. அந்த வகையில் மிக வேகமாக அழிந்து வரும் புலி இனங்களை பாதுகாக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், புலிகள் குறித்து எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதில் அளித்துள்ள ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சர் அஸ்வின் குமார் சவுபே இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 551 புலிகள் இறந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவற்றில் இயற்கை காரணங்களால் 128 புலிகளும், வேட்டைக்காரர்களால் 144 புலிகளும் மேலும், இயற்கைக்கு முரணான காரணங்களால் 19 புலிகளும் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார். புலிகள் கணக்கெடுப்பு 2018-ன் படி இந்தியாவில் அதிகபட்சமாக 3,346 புலிகள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் புலிகளின் எண்ணிக்கை 6% உயர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். புலிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
Leave your comments here...