பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது..!
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று காலை முதல் 19ஆம் தேதி இரவு வரைக்கும் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
சபரிமலையில் மாதந்தோறும் பூஜைகளும், திருவிழாக்களும் நடைபெறுவது வாடிக்கை. அதிலும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் படி பூஜை, மார்கழி மாதத்தில் நடைபெறும் மண்டல பூஜை, தை மாதத்தில் நடைபெறும் மகர விளக்கு மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி, பங்குனி மாதத்தில் நடைபெறும் ஐயப்பன் ஆராட்டு விழா. சித்திரை மாதத்தில் நடக்கும் விஷு கனி விழா ஆகியவை மிகப்புகழ்பெற்ற திருவிழாக்களாகும்
இந்நிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கபட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடைபெற்றது.
இன்று புதன்கிழமை முதல் 19ஆம் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடை பெறுகிறது. மேலும் தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
Leave your comments here...