திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 6-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..!

தமிழகம்

திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 6-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..!

திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 6-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..!

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்கள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு, கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகில் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடலின் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை உப்பு காற்றால் சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி ரூ.1 கோடி செலவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி ரசாயன கலவை பூசும் பணி தொடங்கியது. அந்த பணி முடிவடைந்து திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

அதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 6-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Leave your comments here...