நகர்ப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது – பிரதமர் நரேந்திர மோடி
நகர்ப்புற வளர்ச்சிக்கு புதிய நகரங்களின் வளர்ச்சி, பழைய நகரங்களின் வசதிகளை மேம்படுத்துதலில் கவனம் செலுத்தப்படுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நகர்ப்புறத் திட்டமிடல், மேம்பாடு மற்றும் தூய்மைக் குறித்த, பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா வேகமாக நகரமயமாகி வருவதால், எதிர்கால நகரங்களை உருவாக்குவது முக்கியம்.
இந்த உணர்வு இந்த ஆண்டு பட்ஜெட்டில் பிரதிபலிக்கிறது. நகர்ப்புற வளர்ச்சிக்கு புதியநகரங்களின் வளர்ச்சி, பழைய நகரங்களின் வசதிகளை மேம்படுத்துதலில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியா போன்ற வேகமாக முன்னேறும் நாட்டிற்கு நகர்ப்புற திட்டமிடல் என்பது முக்கியத் தேவை. ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு மிகக் குறைவான நகரங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டன என்பது துரதிர்ஷ்டவசமானது.
இப்போது புதிய நகரங்களின் வளர்ச்சி தேவை அதிகமாக தேவைப்படுகிறது. போக்குவரத்து திட்டமிடல், நீர் மேலாண்மை நகர்ப்புற திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டிய சில பகுதிகள் உள்ளன. சாலைகளை விரிவுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த கருத்தரங்கில் நகர்ப்புறத் திட்டமிடல் வல்லூநர்கள், நிதி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
Leave your comments here...