அதிமுகவில் அடுத்த பரபரப்பு : 2வது தர்மயுத்தம் தொடங்கிவிட்டது – ஓபிஎஸ் அறிவிப்பு

அரசியல்

அதிமுகவில் அடுத்த பரபரப்பு : 2வது தர்மயுத்தம் தொடங்கிவிட்டது – ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுகவில் அடுத்த பரபரப்பு : 2வது தர்மயுத்தம் தொடங்கிவிட்டது – ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக சட்ட விதிகளை காப்பாற்ற 2-வது தர்ம யுத்தத்தை நடத்தி வருவதாகவும், விரைவில் மக்கள் தீர்ப்பு வரும் என்று ஒ.பன்னீர்செல்வம் பேசினார்.

சென்னை தனியார் ஓட்டலில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அ.தி.மு.க. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி உள்பட அனைத்து மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- * என்னதான் நடக்கும் நடக்குட்டுமே…இருட்டினில் நீதி மறையட்டுமே… தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே.. என்ற எம்.ஜி.ஆர். பாடலுக்கேற்ப ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுகவை சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்போம்.

* எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பிறந்த நாட்களோடு அதிமுகவின் பொன்விழாவையும் சேர்த்து முப்பெரும் விழாவாக மார்ச் மாதம் நடத்த ஓபிஎஸ் ஆதரவு

*அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் மாவட்ட அளவில் ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட கிளை அளவுகளில் நிர்வாகிகளை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பின்னர் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது கூறியதாவது;- அதிமுகவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும்; அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன்.தன் இரும்பு பிடிக்குள் கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது.

எதற்கும் அஞ்சாமல் துணிந்து நில்லுங்கள்.முன்வரிசையில் நாங்கள் நின்று, எதிர்வரும் கணைகளை தாங்கி உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம். “வேட்புமனுவை வாபஸ் பெற்று இரட்டை இலை வெற்றி பெற ஆதரவாக இருப்போம் என சொன்னோம். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை” மக்கள் தீர்ப்பு எனும் மகேசன் தீர்ப்பு இருக்கிறது, அது கூடிய விரைவில் வரும்;வாக்கு எண்ணிக்கையின் போது அது தெரியவரும். அதிமுக சட்டவிதியை எந்தளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரை மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்ய முடியாது என கூறினார்.

Leave your comments here...