லடாக் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் – பிரதமர் மோடி..!
லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முன்னதாக லடாக் பாராளுமன்ற தொகுதி எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு 4.1 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சின்குன்லா சுரங்கப் பாதையை வருகிற 2025-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க ரூ.1,681.51 கோடி ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடியின் இந்த முடிவுக்கு லடாக்கின் மிகவும் பின்தங்கிய பகுதியான ஜன்ஸ்கர் பகுதியில் உள்ள லுங்னக் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர்” என்று பதிவிட்டிருந்தார்.
लद्दाख के लोगों का जीवन आसान बने, इसके लिए हम कोई कोर-कसर नहीं छोड़ने वाले हैं। https://t.co/1HMil5paGK
— Narendra Modi (@narendramodi) February 19, 2023
இந்த நிலையில் எம்.பி. ஜம்யாங் செரிங்கின் இந்த ட்விட்டை இணைத்து பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “லடாக் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
Leave your comments here...