வெளியூர்களில் இருந்து சென்னை வரும் அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க உத்தரவு..!
சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது
வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கோயம்பேட்டுக்கு தாம்பரம், கிண்டி வழியாகவும் அல்லது பெருங்களத்தூர் – மதுரவாயல் வழியாகவும் செல்கின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தாம்பரம் ரூட்டை புறக்கணித்து மதுரவாயல் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இதனால் நேர மிச்சம் என்றாலும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம்,கிண்டி, அசோக்பில்லர், வடபழனி ஏரியாக்களில் இறங்க வேண்டிய பயணிகள் நேரடியாக கோயம்பேடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
தாம்பரம் ரூட் என்றால் நேரடியாகவே அந்தந்த ஏரியாக்களில் இறங்கலாம். இந்த பிரச்னைக்கு தற்போது போக்குவரத்துத்துறை முடிவு கட்டியுள்ளது, இது குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ள போக்குவரத்துத்துறை, சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் தாம்பரம் வழியாக இயக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
Leave your comments here...