விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் – பரபரப்பு தகவலைச் சொன்ன பழ. நெடுமாறன்..!
விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது. என்றாலும் கூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று தமிழ் தேசிய அமைப்புகள் கூறி வருகின்றன.
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். பிரபாகரன் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டது. அவருடன் தொடர்பில்தான் உள்ளோம். பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர். உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது. தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இலங்கையில் ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்
Leave your comments here...