ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது – ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை

இந்தியா

ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது – ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை

ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது – ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளில், 2022-23 முழு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதனால், இக்கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. இதனை முன்னிட்டு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் இன்று காலை 11 மணிக்கு ஜனாதிபதி முர்மு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25-ந்தேதி ஜனாதிபதி பதவி ஏற்று கொண்ட பின்னர், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து, பாதுகாப்பு வாகனங்கள் சூழ ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாடாளுமன்றத்திற்கு இன்று காலை வருகை தந்துள்ளார். இதேபோன்று பிரதமர் மோடி, இரு அவைகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தொடரில் பங்கேற்க வருகை தந்துள்ளனர். இதன்பின்னர், ஜனாதிபதி முர்மு இரு அவைகளின் கூட்டு கூட்டத்தொடரில் இன்று உரையாற்றினார்.

அவர் பேசும்போது, 2047-ம் ஆண்டுக்குள் கடந்த கால பெருமைகளை இணைக்கும் மற்றும் நவீனத்தின் அனைத்து பொற்கால அத்தியாங்களை உள்ளடக்கிய விசயங்களை கொண்டு ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். ஆத்மநிர்பார் இந்தியாவை நாம் கட்டமைக்க வேண்டும்.

நாட்டின் மனிதநேயம் சார்ந்த கடமைகளை பூர்த்தி செய்யும் திறன் கொண்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என தனது உரையில் அவர் கூறியுள்ளார். வறுமை இல்லாத இந்தியா உருவாக வேண்டும். அதன் நடுத்தர வர்க்கத்து மக்களும், வளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். சமூகம் மற்றும் நாட்டுக்கு ஒரு பாதையை காட்ட, இளைஞர்கள் மற்றும் மகளிர் முன்னணியில் நிற்கும் வகையிலான இந்தியா உருவாக வேண்டும். அந்த நேரத்தில், நமது இளைஞர்கள் இரண்டடி முன்னே இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்தியாவின் தன்னம்பிக்கை இன்று உச்சத்தில் உள்ளது. உலக நாடுகள் இந்தியாவை வெவ்வேறு கண்ணோட்டத்தில் உற்று நோக்கி வருகின்றன. உலக நாடுகளுக்கு தேவையான தீர்வுகளை இந்தியா வழங்கி கொண்டிருக்கிறது என கூட்டு கூட்டத்தில் அவர் உரையாற்றி உள்ளார்.

உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கும் விமான பயணம் சாத்தியமாகியுள்ளது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ரயில் நிலையங்களும், விமான நிலையங்களும் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் ரயில் சேவை பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது எனவும் கூறினார்.ராணுவ தளவாட தயாரிப்பில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நாட்டின் விமானப்படை அதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உள்நாட்டிலேயே போர் விமானங்களை கட்டமைக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது எனவும் கூறினார்.

ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். கரீப் கல்யாண் திட்டம் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறுகின்றர் எனவும் அவர் கூறியுள்ளார். சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவு செய்துள்ளது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

Leave your comments here...