திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை மகாதீபம்..!

ஆன்மிகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை மகாதீபம்..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை மகாதீபம்..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதன்படி இன்று மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிளம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் மகாதீபம் ஏற்றப்பட்டதும் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள். மலையேறும் பக்தர்களுக்கு, 80 கமாண்டோ படையினர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோவில் வளாகம், கிரிவலப்பாதை உள்ளிட்ட பகுதிகளில், மொத்தம், 344 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
குறிப்பாக ஆளில்லா குட்டி விமானம் மூலம் கூட்ட நெரிசல் கண்காணிக்கப்படும். நகரை சுற்றி, 18 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், திருவண்ணாமலை நகரம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும், போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது. 24 ஆயிரம் கார்கள் நிறுத்த, 90 கார் பார்க்கிங் வசதி, 15 தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைத்து, 2,615 பஸ்களும், தற்காலிக பஸ் ஸ்டாண்டலிருந்து கிரிவலப்பாதை வரை, 60 இலவச பஸ்களும் இயக்கப்படுகின்றன.

Leave your comments here...