சேலம் 8 வழி சாலைத்திட்டத்தில் திமுக அரசு எதிர்க்கவில்லை – டெல்லியில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
சென்னை – சேலம் 8 வழி சாலைத்திட்டத்தில் திமுக அரசு எதிர்க்கவில்லை என்று டெல்லியில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார். சாலைத்திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
சேலம் – சென்னை 8 வழிசாலைத்திட்டம் தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கப்பலூர், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிக்கை அகற்ற ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 2 சுங்கச்சாவடிகளுக்கும் விரைவில் மாற்றுவழி ஏற்படுத்தப்படும்.
புதுடெல்லியில் இன்று மாண்புமிகு தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தமிழக சாலை மேம்பாட்டிற்காக மாண்புமிகு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.@Nitin_gadkari அவர்களை சந்தித்தபோது.உடன் திரு.ஆ.ராசா எம்.பி pic.twitter.com/rtlofVEdrQ
— E.V.Velu (எ.வ.வேலு) (@evvelu) January 4, 2023
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழு விரைவில் ஆய்வு செய்யும் என நிதின் கட்கரி உறுதி அளித்தார் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களிடம் தமிழ்நாடு அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை கடிதம் வழங்கி, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து பேசினார்.
Leave your comments here...