சியாச்சின் பனிமலையில் முதல் பெண் ராணுவ அதிகாரி – புதிய வரலாறு படைத்த கேப்டன் சிவா சவுகான்.!

இந்தியா

சியாச்சின் பனிமலையில் முதல் பெண் ராணுவ அதிகாரி – புதிய வரலாறு படைத்த கேப்டன் சிவா சவுகான்.!

சியாச்சின் பனிமலையில் முதல் பெண் ராணுவ அதிகாரி – புதிய வரலாறு படைத்த கேப்டன் சிவா சவுகான்.!

<

சியாச்சின் பனிமலையில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற வரலாற்றை கேப்டன் சிவா சவுகான் படைத்துள்ளார். சியாச்சின் பனிமலை பூமியின் மிக உயரமான போர்க்களமாகும். அங்கு 1984ஆம் ஆண்டு முதல் இந்தியாவும் பாகிஸ்தானும் அவ்வப்போது சண்டையிட்டு வருகின்றன.

இந்நிலையில் சியாச்சின் பனிமலையில் உள்ள குமார் போஸ்டில், ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் எனும் இந்திய ராணுவப் பிரிவை சேர்ந்த கேப்டன் சிவா சவுகான் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

இந்த அதிகாரப்பூர்வ தகவலை, இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கண்ணாடிக் கூரையை உடைத்தல் என்ற தலைப்புடன் தொடங்கிய அந்த ட்விட்டர் பதிவில், இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ஃப்யூரி கார்ப்ஸ் கேப்டன் சிவ சவுகான், கடுமையான பயிற்சிகளுக்குப் பின்னர், குமார் போஸ்ட்டில் ராணுவ பணிக்காக அனுப்பப்படும் முதல் பெண் ஆவார் என்று தெரிவித்துள்ளது.

Leave your comments here...