சினிமா துளிகள்
வாரிசு இசை வெளியீட்டு விழா – இருக்கைகள் சேதம்….! கணக்கெடுப்புக்கு பின் தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம்..!
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்றிரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் வந்திருந்த விஜய் ரசிகர்கள் அரங்கில் குவிந்தனர். திரையுலக பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகப்படியான இருக்கைகள் சேதம் அடைந்துள்ளது. நாளை சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளதாக அரங்கம் பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. மேலும், சேத கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
Leave your comments here...