கஞ்சா விற்பனை : தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு – எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
போதைப் பொருள் விற்பனையால் தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் தொடரும் காவல்நிலைய மரணங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “ ஆபரேஷன் கஞ்சா 2.0 வெற்றி எனில், ஏன் தற்போது ஆபரேஷன் கஞ்சா 3.0 நடவடிக்கையினை காவல் துறை தொடங்கியுள்ளது என்பதை காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் விளக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கஞ்சாவை வயது வித்தியாசம் இல்லாமல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.
போதைப் பொருள் விற்பனையால் தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் தொடரும் காவல்நிலைய மரணங்கள்!
– மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள். pic.twitter.com/pX0TKAnbgH
— AIADMK (@AIADMKOfficial) December 25, 2022
கஞ்சா போதையினால் நடைபெற்றதாக சில குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்து, தண்டனை பெற்றுத் தந்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது. கஞ்சா எங்கிருந்த கடத்தப்பட்டு வருகிறது? இதுவரை முழுமையாக கண்டுபிடிக்க முடியாதது ஏன்? கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? போதைப் பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை கைது செய்ய தடுப்பவர்கள் யார் என்ற கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
செல்போன் திருட்டு விவகாரத்தில் காவல் துறையினர் தாக்கியதால் தனது கணவர் தினேஷ் உயிரிழந்ததாக அவரது மனைவி கவுசல்யா அளித்துள்ள புகார் பற்றி அறிக்கையில் குறிப்பிட்ட அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்பதை இதுபோன்ற தொடர் லாக் அப் மரணங்கள் நிரூபிக்கின்றன. ஒருசில காவலர்களின் அதிகார வரம்பு மீறல்களால் இதே நிலை தொடருமானால், புகார் அளிக்கக் கூட காவல் நிலையம் செல்ல பொதுமக்கள் அஞ்சுவார்கள்” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், “எந்த தகுதியும் இல்லாதவர்களிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் அந்த மாநிலம் எந்த அளவுக்கு அதள பாதாளத்திற்கு சென்று சீரழியும் என்பதற்கு தமிழகத்தின் தற்போதைய நிலையே சான்றாகும். இனியாவது காவல் துறையை தங்களது ஏவல் துறையாக பயன்படுத்தாமல் சட்டம் – ஒழுங்கையும் குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தும் வகையில் அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்” என முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளா
Leave your comments here...