சொத்து குவிப்பு வழக்கு – திமுக எம்பி. ஆ.ராசா நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன்

தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கு – திமுக எம்பி. ஆ.ராசா நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன்

சொத்து குவிப்பு வழக்கு – திமுக எம்பி. ஆ.ராசா நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன்

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் மீது 2015 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் ஆ.ராசா உட்பட நான்கு பேர் வரும் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் சொத்து குவித்ததாகக் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய முன்னாள் அமைச்சராக இருந்த ஆ. ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.

இது தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கு எம்.பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மொத்தம் (நான்கு தனிநபர்கள், இரண்டு நிறுவனங்கள் உட்பட) ஆறு பேரும் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ஆறு பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், விஜய் சடரங்கனி உள்ளிட்ட 4 பேரும், அதேபோல் கோவை ஷெல்டர்ஸ், மங்கல் டெக் பார்க் என்ற 2 நிறுவனமும் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பி வழக்கு விசாரணையை ஜனவரி 10ஆம் தேதி தள்ளி வைத்தது நீதிமன்றம்.

Leave your comments here...