குமரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஜெபக்கூடம்: அதிகாரிகள் அதிரடியாக “சீல்” வைப்பு…!
கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் ஆலங்கோட்டை ஊரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள ஜெப கூடத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர். கணபதிபுரம் பேரூராட்சி 4வது மெயின் ரோட்டில் அருகாமையில் ராஜ்குமார் என்பவர் 580 சதுர அடியில் வீடு காட்டுவதாக கூறி 2014-2015 ம் ஆண்டு பேரூராட்சியில் அனுமதி வாங்கியுள்ளார்.
ஆனால் அவர் அதில் வீடு கட்டாமல் தவறான முறையில் அனுமதி பெறாமல் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் என்ற பெயரில் ஜெப கூடத்தை அமைத்து ஜெபக்கூட்டம் நடத்தி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் மதப்பிரச்சாரம் செய்துவருவதாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஆலங்கோட்டை ஊர் பொதுமக்கள் சார்பாக பல்வேறு புகார்கள் சென்று உள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாக சம்பந்தப்பட்ட ஜெபகூடத்தை நடத்திவரும் ராஜ்குமாருக்கு கடிதம் அனுப்பியது. அதில் இந்த அறிவிப்பு கிடைத்த 24 மணி நேரத்தில் மேற்படி அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட ஜெப கூடத்தை அப்புறப்படுத்த இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்றும், தாங்களே முன்வந்து 24 நேரத்திற்குள் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஜெபகூடத்தை அகற்ற தவறினால் அக்கூடத்தை சீல் வைத்து அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் கூறியுள்ளார்.
ஆனால் இதுகுறித்து ஜெபக் கூடத்தை நடத்திவரும் ராஜ்குமார் கண்டுகொள்ளவில்லை. இதனால் பேரூராட்சி அதிகாரிகள் அரசு அனுமதி இல்லாமல் வீட்டை ஜெபக்கூடம் ஆக மாற்றி மதமாற்றம் செய்ய பயன்படுத்திய கூடாரத்தை அதிகாரிகள் “சீல்” வைத்தனர். இதனால் அப்பகுதி சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Leave your comments here...