நீங்கள் என் குடும்பம் – கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி..!

இந்தியா

நீங்கள் என் குடும்பம் – கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி..!

நீங்கள் என் குடும்பம் – கார்கில் எல்லையில்  ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி..!

கார்கிலில் பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் பிரதமர் மோடி.பிரதமர் மோடி வருகையையொட்டி லடாக் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மங்களகரமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும் எனக் கூறியிருக்கிறார்.

பிரதமராக மோடி பதவியேற்றது முதல், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று எல்லை பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள ராணுவ வீரர்களுடன் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி, 2014ல் சியாச்சின் பகுதி, 2015ல் பஞ்சாப் எல்லை, 2016ல் இமாச்சல பிரதேச எல்லை, 2017ல் ஜம்மு-காஷ்மீர் எல்லை, 2018ல் உத்தரகாண்ட், 2019ல் ஜம்மு-காஷ்மீர், 2020ல் ராஜஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாடினார்.


இந்தாண்டு தீபாவளி பண்டிகையை காஷ்மீரின் கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.


பின்னர் ராணுவ வீரர்களுடன் அவர் உரையாற்றியதாவது: என்னைப் பொறுத்தவரை, நீங்கள் (ராணுவ வீரர்கள்) அனைவரும் பல ஆண்டுகளாக எனது குடும்பமாக இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் மத்தியில் தீபாவளியைக் கொண்டாடுவது ஒரு பாக்கியம். இதை விட சிறந்த தீபாவளியை என்னால் கொண்டாடியிருக்க முடியாது. என் உற்சாகம், பலம் உங்களுடன் இருக்கிறது. போரில் வெற்றி பெற்ற இந்த கார்கில் மண்ணிலிருந்து, நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.


தீபாவளி என்றால் ‘பயங்கரவாதத்தின் முடிவுப் பண்டிகை’; கார்கில் அதை சாத்தியமாக்கியது. கார்கிலில் நமது ராணுவம் பயங்கரவாதத்தை நசுக்கியது. நமது எல்லைகளை ஆயுதப்படைகள் பாதுகாப்பதால் தான், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிம்மதியாக உறங்குகிறார்கள். நீங்கள் எல்லையில் இருந்து எங்களை பாதுகாப்பது போல் ஊழல் போன்ற தீமைகளை எதிர்த்து நாட்டிற்குள் செயல்படுகிறோம். இந்தியாவின் ஆயுதப் படைகளின் ஆத்மாவுக்கு நான் தலைவணங்குகிறேன். உங்களின் தியாகங்கள் எப்பொழுதும் நம் நாட்டை பெருமைப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Leave your comments here...