ரூ. 500 கோடி பட்ஜெட்டில் ராமாயணம் திரைப்படம் வெளிவருவது உறுதி… அல்லு அர்ஜுன் அறிவிப்பு
ரூ. 500 கோடி பட்ஜெட்டில் ‘ராமாயணம்’ திரைப்படம் வெளிவருவது உறுதி என்றும், இந்த படத்திற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.
வரலாறு மற்றும் புராண கதை தொடர்பான படங்களை எடுப்பதில் கடந்த சில ஆண்டுகளாக திரைத் துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் வெளிவந்த பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள், பொன்னியின் செல்வன், பிம்பிசாரா, பத்மாவத் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையே ராமாயணம் திரைப்படமாக உருவாக்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பாக அல்லு அர்ஜுன் கூறியிருந்தார். இதன்பின்னர் எந்த அப்டேட்டும் இந்த படம் தொடர்பாக வெளிவரவில்லை.
இதுபற்றி அல்லு அர்ஜுன் கூறியதாவது- நான் அறிவித்த ராமாயணம் படம் நின்றுவிடவில்லை. அதனை நிச்சயமாக திரைக்கு கொண்டு வருவோம். தற்போது ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பணிகள் நடக்கின்றன.6 மாதத்திற்குள் pre-production பணிகள் முற்றிலும் நிறைவுபெற்று, அடுத்ததாக படப்பிடிப்புக்கு தயாராகி விடுவோம். நாங்கள் அறிவித்தபோது இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடி இருக்கும் என்று மதிப்பிட்டு இருந்தோம். இன்றைய சூழலில் இந்த பட்ஜெட் இன்னும் அதிகமாகலாம். இவ்வாறு அல்லு அர்ஜுன் கூறினார்.
தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் 2-ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
Leave your comments here...