இலவச பேருந்தால் பெண்களுக்கு ரூ.2000 கோடி மிச்சம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் இலவச பேருந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2000 மிச்சப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்றாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது, இதில் நேரம் இல்லா நேரத்தின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
அதில், மொத்தம் 3337 அறிவிப்புகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளதாகவும், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசு பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகளை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், நடப்பாண்டில் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7200 வகுப்பறைகள் கட்டப்படவுள்ளதாகவும் அறிவித்தார்.2020 – 21ஆம் ஆண்டில் கொரோனாவால் பொது போக்குவரத்து அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிதி நிலை கடும் மோசமடைந்தது. ஆனால் தற்போது நாளொன்றுக்கு 1 கோடியே 70 லட்சம் பயணிகளாக அதிகரித்துள்ளது. தற்போது இந்த இலவச மகளிர் பேருந்தால் நாளொன்றுக்கு 44 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் கோடி மிச்சமடைந்துள்ளதாக பெருமையோடு தெரிவித்தார். இதனை அரசு வருமான இழப்பாக கருதவில்லை என கூறிய அவர், மகளிர் மேம்பாட்டுக்கான வளர்ச்சி திட்டமாகவே கருதுகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Leave your comments here...