உலகம்
பாகிஸ்தானில் மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்த முன்னாள் தலைமை நீதிபதி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..!
பாகிஸ்தான் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாத அட்டூழியங்கள் பெருகி வருவதாக அந்நாட்டு பத்திரிகை தெரிவிக்கிறது.
பலுசிஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி முகம்மது நூர் மெஸ்கன்ஷி. இவர் ஹரன் என்ற பகுதியில் ஒரு மசூதியில் தொழுகை நடத்தி விட்டு வெளியே வரும் போது சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். பலுசிஸ்தான் முதல்வர் அப்துல் குதூஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிபதி ஆற்றிய சேவை மறக்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.
இது போல் குவெட்டா பார் அசோசியேஷன் தலைவர் அஜ்மல் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Leave your comments here...