கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா..? போலீசார் தீவிர விசாரணை..!
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் நரபலி தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கை கொச்சி நகர காவல் துணை ஆணையர் எஸ்.சசிதரன் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணை நடத்த கேரள காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பெரும்பாவூர் துணை காவல் கண்காணிப்பாளர் அனுஜ் பாலிவால் முதன்மை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எர்ணாகுளம் துணை ஆணையர் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகளும் இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தருமபுரி பத்மா உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட எலந்தூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 3 பெண்கள் காணாமல் போயுள்ளனர். 5 ஆண்டுகளில் கொச்சி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போன நிலையில் ஒரு பெண் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய 12 பெண்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாததால் அவர்கள் காணாமல் போன வழக்கை கேரள போலீஸ் மீண்டும் விசாரிக்கிறது.
பத்மா உள்ளிட்ட 2 பெண்களை நரபலி கொடுத்த மந்திரவாதி ஷாஃபி, 2018 முதல் பகவல் சிங் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் மேலும் சில நரபலி பூஜைகளை ஷாஃபி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். காணாமல் போன பெண்கள் என்ன ஆனார்கள் என தெரியாததால், மந்திரவாதி ஷாஃபிஇடம் சிக்கிய பலியானார்களா என்று விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். 2 பெண்கள் நரபலி வழக்கில் சிறையில் உள்ள மந்திரவாதி ஷாஃபியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Leave your comments here...