ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு..?
பிரபல தொழில் அதிபரான ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் வசித்து வருகிறார். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளார். இவருக்கு மத்திய அரசு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி வந்தது.
இந்தநிலையில் மத்திய அரசு அவரது பாதுகாப்பை அதிகரித்து உள்ளது. இதன்படி அவருக்கு உச்சப்பட்ச பாதுகாப்பு வகையான ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதன்படி 40-50 கமாண்டோ படை வீரர்கள் ஆயுதங்களுடன் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் அம்பானியின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிப்பதுடன் அவர் பயணம் செய்யும் போது அவருக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகளிடம் இருந்து வந்த எச்சரிக்கையை அடுத்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழில் அதிபர் கவுதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க கடந்த மாதம் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...