திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
திருமணம் ஆகாதவர்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவரால் மனைவிக்கு நடந்தாலும் பலாத்காரம் என்பது பலாத்காரமே என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பம் அடைந்த பிறகு திருமணம் பந்தம் ஏற்படாமல் போனது. திருமணம் ஆகாதவர் என்ற காரணத்தை சுட்டிகாட்டி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்து விட்டனர்.
டெல்லி உயர்நீதிமன்றமும் அந்த பெண்ணின் கருக்கலைப்பு உரிமைக்கு அனுமதி வழங்க மறுத்ததால் அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் திருமணம் ஆகாதவர் என்ற ஒரே காரணத்தால் அவருக்கு கருக்கலைப்பு உரிமையை மறுக்கமுடியாது என்று கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அப்போது கருக்கலைப்பு சட்டத்தில் கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் உரிய விசாரணைக்கு பிறகு முழு தீர்ப்பை வெளியிட்டுருகின்றனர். அதில் பாதுகாப்பான சட்ட பூர்வமான கருகலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களும் உரிமை உள்ளவர்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய திருமணம் ஆகாத பெண்களுக்கு உரிமை உண்டு என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். 2021-ம் ஆண்டு மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருமணத்தின் படி திருமணம் ஆனவர்கள் அல்லது திருமணம் ஆகாதவர்கள் என்ற பாகுபாடு காட்டாபடவில்லை என்று நீதிபதிகள் கூறினர். கருகலைப்பு சட்டத்தின் படி கருக்கலைப்பு உரிமை தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் திருமண ஆன பெண்களுக்கு உள்ள சிக்கல்களை நீதிபதிகள் சுட்டிகாட்டினர்.
திருமணம் ஆன பெண்ணை கணவர் உறவுக்கு கட்டயா படுத்தினாலும் அது பலாத்காரமே என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். பலாத்காரம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்க படுவது போன்று கட்டாயத்தின் பேரில் கர்ப்பமாகும் திருமணம் ஆன பெண் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். திருமணத்தை மட்டும் காரணத்தை காட்டி தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமையை பறிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
Leave your comments here...