பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – 6 பேரை கைது செய்த போலீசார்..!
கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பாஜக நிர்வாகி மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இந்த சம்வத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் இருவரை கைது செய்துள்ளோம். அதில் ஜேசுராஜ் என்பவர் மறைமலைநகர் மதுக்கரை பகுதியை சேர்ந்தவர். இலியாஸ் திருவள்ளுவர் நகர் பகுதியில் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் எஸ்டிபிஐ கட்சியில் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். இன்னும் இரண்டு வழக்குகளில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்று கூறினார்.
மேலும், சிசிடிவி மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசாரின் விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குனியமுத்தூரில் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சம்பவம் மற்றும் காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
இதேபோல் ஈரோடு மூலப்பாளையத்தில் பாஜக பிரமுகர் தட்சிணாமூர்த்தி பர்னிச்சர் கடையில் கடந்த 22 ம் தேதி அதிகாலையில் பெட்ரோல் மற்றும் டீசல் பாக்கெட்டுகள் வீசப்பட்டன. நல்வாய்ப்பாக தீ பற்றாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதில் தொடர்புடைய கருங்கல்பாளையத்தை சேர்ந்த சதாம் உசேன், ஆசிக், ஜாபர், கலீல் ரகுமான் ஆகிய நான்கு எஸ்டிபிஐ கட்சி உறுப்பினர்களை ஈரோடு தாலுகா போலீசார் கைது செய்துள்ளனர்.
Leave your comments here...