சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும்- மன்.கி.பாத் நிகழ்ச்சியில் l பிரதமர் மோடி அறிவிப்பு..!

இந்தியா

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும்- மன்.கி.பாத் நிகழ்ச்சியில் l பிரதமர் மோடி அறிவிப்பு..!

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும்- மன்.கி.பாத் நிகழ்ச்சியில் l பிரதமர் மோடி அறிவிப்பு..!

நாட்டின் பிரதமராக பதவியேற்றது முதல் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். மன் கி பாத் (மனதின் குரல்) என்ற பெயரிலான இந்த வானொலி உரையில், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார்.

இப்படி ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடி கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் பிரதமரின் உரை நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது.இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். பிரதமர் மோடியின் 93-வது மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும்.

பிரதமர் மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசியதாவது:- சிவிங்கிகள் இந்தியாவிற்கு திரும்பி வந்தது குறித்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிவிங்கிகளை கண்காணிக்கவும், பார்வையாளர்கள் பார்வையிடவும் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு பெயர் வைப்பது குறித்து மக்கள் தங்களின் எண்ணங்களை தெரிவிக்கலாம். நமது பாரம்பரியத்திற்கு ஏற்ப பெயர் வைத்தால் சிறப்பானதாக இருக்கும், விலங்குகளை மனிதர்கள் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் கருத்துகளை தெரிவிக்கலாம்.

உடல் மற்றும் மன நலனுக்கு யோகா உகந்ததாக உள்ளதை உலக நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. காசநோய் இல்லாத தேசமாக 2025க்குள் இந்தியா மாறும். உள்ளூர் தொழிலுக்கு மக்கள் ஆதரவு அளித்து உள்ளூர் தயாரிப்புகளை வாங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டில் இந்தியா பல உயரங்களை எட்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மத்தியில் அவர்களின் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், உடல்தகுதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பலரும் உழைக்கின்றனர்.

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய இந்தியாவின் பயணத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக, சணல், பருத்தி, வாழை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் பைகளை பயன்படுத்தலாம். பருவ நிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நமது கடலோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் கவலையளிக்கின்றன. இது போன்ற பிரச்சனைகளை கையாள்வது பெரும் சவாலாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave your comments here...