பிரதமர் மோடியை ஐ.நா.வில் பாராட்டிய மெக்சிகோ..! எதற்கு தெரியுமா…?
சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தப்போது, ரஷ்யா-உக்ரைன் இடையேயான பேர் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். போருக்கான யுகம் இது அல்ல என்றும் புதினிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். அவரது இந்த வார்த்தைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்தன.
இந்நிலையில் ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு ஐ.நா.சபையில் மெக்சிகோ பாராட்டு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சர் லூயிஸ் எப்ரார்டு கலந்துகொண்டு பேசும்போது, பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதற்கு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உலக தலைவர்கள் அடங்கிய குழுவை ஐ.நா.பொதுச் செயலாளர் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்திய லூயிஸ் எப்ரார்டு, அந்தக்குழுவில் போப் பிரான்சிஸ், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Leave your comments here...