பெண் நெசவாளர்களுக்கு உதவிய தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபு..!
தெலுங்கு முன்னணி ஹீரோக்களில் ஒருவரான மகேஷ் பாபு, கைத்தறி நெசவு மேற்கொள்ளும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாகவும், அவர்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் விதமாகவும் தன் மனைவியுடன் சேர்ந்து ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.
தெலங்கானாவில் இருக்கும் நாராயணன்பேட் என்ற கிராமத்தில், பெண் நெசவாளர்கள் கைத்தறி மற்றும் பட்டு ஆடைகளை உருவாக்கி வருகின்றனர். அவர்களின் உற்பத்திப் பொருட்களை விற்கும் வகையில் ஆன்லைன் தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதை மகேஷ் பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவரது மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோட்கர் கலந்துகொண்டார்.
அப்போது மகேஷ் பாபு கூறுகையில், ‘கிராமத்துப் பெண்களின் திறமையை, குறிப்பாக பெண் நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் திறமையைக் கொண்டு உருவாகும் பொருட்களை விற்க உதவும் முயற்சிக்கு என் ஆதரவை தெரிவித்துள்ளேன். இதுதொடர்பாக அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் துணையாக இருப்பேன்’ என்றார்.
Leave your comments here...